திருகோணமலை அன்புவழிபுரம் அன்பு சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி தின கலை, இலக்கிய நிகழ்வு நேற்று (19) இடம்பெற்றது.
இந்நிகழ்வு அன்பு சனசமூக நிலையத்தின் தலைவர் பிரான்சிஸ் சேகர் தலைமையில் இடம்பெற்றது.
கலாநிதி செ.ஞானராசா தலைமையில் 'இன்னும் எத்தனை காலம் தான் காத்திருக்கப்போகின்றோம்..?' என்ற தலைப்பில் இடம்பெற்ற சிறப்பு கவியரங்கில் கவிஞர் அ.அச்சுதன் (ஊடகவியலாளர்), கவிஞர் ச.திருச்செந்தூரன் (ஊடகவியலாளர்), கவிஞர் சி.ஜெயசிறி, கவிஞர் தாஹிரா சித்தீக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கவிபாடியிருந்தனர்.
இந்நிகழ்வில், சிவநடனம், சிறுவர் நடனம், சிறுவர் கதை கூறல் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், நிகழ்வில் பங்குபற்றிய மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புவழிபுரத்தில் நடைபெற்ற பெளர்ணமி தின கலை இலக்கிய நிகழ்வு
bytrinco mirrer
-
0