மூர்த்தி, தலம், தீர்த்த மெனும் மூவகைச் சிறப்புகளுடன் தெட்சஷண கைலாசமெனப் புகழ் பெற்றதும், ஞானப் பாலுண்ட திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகத்தினாலும், அருணகிரிநாத சுவாமிகளின் திருப்புகழினாலும் ஏத்திப் போற்றப்பட்டதுமான திருகோணமலை நகரிலே ராமபிரான் தனது வில்லையூன்றியமையால் வில்லூன்றி எனப் போற்றப்படும் திருத்தலத்திலே வீற்றிருந்து வேண்டுவோருக்கு வேண்டுவன ஈந்தருளும் கலியுகவரதனாகிய கஜவல்லி, மஹாவல்லி சமேத ஸ்ரீ சண்முகப் பெருமான் வில்லூன்றியம்பதியில் அருள்பாலித்து வரும் வேளையில் வருடாந்த மஹோற்சவம் (19.08.2024) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!
bytrinco mirrer
-
0