பெண்களை வலுவூட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக 2024/07/20 ஆம் நாள் அன்று திருக்கோணமலை இலிங்க நகரில் திறந்து வைக்கப் பட்ட அரவை ஆலையை ஆய்வு செய்வதற்கான களப் பயணம் ஒன்றை 2024/08/14 ஆம் நாளாகிய இன்று திருக்கோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கதிரவேலு சண்முகம் குகதாசன் மேற்கொண்டார். இவரோடு திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கச்
செயலாளர் கணபதிப்பிள்ளை சிவானந்தம் அவர்களும் உடன் சென்றார்.
இந்த ஆலையில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
பெண்களை வலுவூட்டும் முயற்சி-அரவை ஆலையை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர்
bytrinco mirrer
-
0