திருக்கோணமலை மாற்றுத் திறனாளிகள் அபிவிருத்திச் சங்கத்தின் 15 ஆவது ஆண்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் மருத்துவ முகாமும் 2024/03/02 ஆம் நாள் ஆகிய இன்று திருக்கோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு கே.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருக்கோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு. சண்முகம் குகதாசன், பொருளாளர் திரு. இராசரெத்தினம் கோகுலதாசன், அரிமா சங்க (லயன்ஸ் கழக) ஆளுநர் திரு. ஜனரஞ்சன், மூத்த மருத்துவர் அருள்குமரன் மரு.பிரதீபா மரு.உஷா நந்தினி அரிமா கழகத்தைச் சேர்ந்த திரு.ஜலால், திரு.சதீஸ் முதலியோர் கலந்து சிறப்பித்ததோடு, ஊன்று கோள்களையும் சக்கர நாற்காலிகளையும் கற்றல் கருவிகளையும் பழமரக் கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.
மாற்றுத் திறனாளிகள் அபிவிருத்திச் சங்க 15 ஆண்டுவிழா
bytrinco mirrer
-
0