(அ . அச்சுதன்)
திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தினால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வும் இன்று புதன்கிழமை (14) காலை திருகோணமலை சிறைச்சாலையில் இடம் பெற்றது.
நிகழ்வில் நடமாடும் நூலக சேவை பற்றியும் நூலகம் பற்றியும் சிறைக்கைதிகளுடன் கலந்துரையாடல் இடம் பெற்றது.
ஒரு தொகுதி நூல்களை சிறைச்சாலை நூலகத்திற்கு திருகோணமலை நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் பிறேமவன்ச அவர்களிடம் கையளிப்பதையும் அவர்கள் உரையாற்றுவதையும் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் நா . பரமேஸ்வரன் , திருகோணமலை சிறைச்சாலை பிரதான ஜெயிலர் இ . மோகனராசா , திருகோணமலை பொது நூலகத்தின் பிரதம நூலகர் ந . யோகேஸ்வரன் , நூலகர் மு . லெ . றிம்சானா , நூலக உதவியாளர்கள் உ . ரஜனிகாந்தன் , அ . அச்சுதன் , நூலக உழியர் சி . கமலேஸ்வரி சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தகளான முபாறக் , சாந்த ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
திருகோணமலை சிறைச்சாலையில் நூலக நடமாடும் சேவையும் நூல் அன்பளிப்பும்..!
bytrinco mirrer
-
0