தற்காப்பு கலையான சீனடி பயிற்சி செயலமர்வு கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (2) நடை பெற்றது.
மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் தொலஸ் மகே பஹன எனும்12 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இச் செயலமர்வை கிண்ணியா கலாசார அதிகார சபை ஒழுங்கு செய்திருந்தது.
இச் செயலமர்வில் வளவாளர்களாக எம்.எம்.ராபி,ஏ.பஸீகு இல்ஹாம்,ஏ.ஏ.கபூர்,ஏ.கே.பஸீர், ஆகியோர் தற்காப்பு சீனடி கலைகள் பற்றி இங்கு விரிவுரையாற்றினர். மகமாறு ,சம்மாவஜதீவு , காக்காமுனை மற்றும் பெரியாற்றுமுனை சீனடி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான சான்றிதழ்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.ஹில்மி,திருமலை மாவட்ட செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சம்சீத் மற்றும் கலாசார அதிகார சபை ஆலோசகர் எம்.ஏ.அக்பர் சலீம்,கலாசார அதிகார சபை உப செயலாளர் எம்.ஏ.முகமட் மற்றும் வளவாளர்கள் ஆகியோரால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.