அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும்

 


இந்த வருடம் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த சம்பள அதிகரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எவ்வளவு சம்பளம் உயர்த்தப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

மேலும், அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களுக்கு இந்த சம்பள அதிகரிப்பு கிடைக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.


Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post