அன்புவழிபுரத்தில் நூலக நடமாடும் சேவை

(அ . அச்சுதன்) திருகோணமலை நகரசபை பொது நூலகத்தின் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலக நடமாடும் சேவை திருகோணமலை அன்புவழிபுரம் நூலக மண்டபத்தில் நகரசபையின் செயலாளர் வெ. இராஜசேகர் தலைமையில் நேற்று (21) இடம் பெற்றது. நிகழ்வில் நகரசபையின் நிர்வாக உத்தியோகத்தர் என் . பரமேஸ்வரன் , நூலகர் மு.லெ. றிம்சான , அன்பு சனசமூக நிலையத்தின் பொறுப்பாளர்கள் , நூலக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். நடமாடும் சேவையில் நூலக கண்காட்சியும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post