உப்புவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல நிகழ்வுகள். !






( சேனையூர் நிருபர் ) 


தேசிய வாசிப்பு மாதம் ஐப்பசி...
 ''உலகம் வாசிப்பவர்களுக்கே சொந்தமானது''  என்ற   தொனிப் பொருளிற்கு அமைவாக   உப்புவெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நிகழ்வுகள்   பிரதேச சபையின் செயலாளர்
N .யாழினி அவர்களின் தலைமையின் கீழ் பாடசாலை மட்டத்தில்  தரம் 01 தொடக்கம் உயர்தரம் வரை யிலான மாணவர்களுக்கான போட்டிகள் வாசகர்களிற்கிடையிலான விழிப்புணர்வுகள்  நடமாடும் சேவை, இலவச நூலக அங்கத்துவம் வழங்கல் என்பனவும் சபையின் கீழ் உள்ள உப்புவெளி, சாம்பல்தீவு, வெள்ளைமணல்.  சீனக்குடா ஆகிய பொது  நூலகங்களால் முன்னெடுக்கப்பட்டது.

 அதனடிப்படை யில் நேற்று   உள்ளூர் உற்பத்தியளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டது. அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து பொருட்களை கொள்வனவு செய்தனர். நிகழ்வில் செயலாளர்  N. யாழினி, நூலகர் K.வரதகுமார்,   கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் T.தர்சானந்தன் ,  உள்ளூராட்சி உதவியாளர் K.தயானந்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அத்துடன் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என  பலரும் கலந்து சிறப்பித்தனர்






Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post