கிழக்கில் 499 அதிபர் நியமனங்கள் வழங்கி வைப்பு..!

 




(அ . அச்சுதன்) 


கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களால் இன்று (06)  நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல,வீரசிங்க, அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா,பிரதம செயலாளர் R.M.K.S ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.










Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post