புல்மோட்டையில் உள்ள வறிய மாணவர்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மூலம் ஒன்றரை மில்லியன் செலவில் மிதிவண்டி வழங்கிவைக்கப்பட்டது!

 புல்மோட்டையில் உள்ள வறிய மாணவர்களுக்கு முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மூலம் ஒன்றரை  மில்லியன் செலவில் துவிச்சக்கரவண்டி   வழங்கி வைக்கப்பட்டது!


ஹஸ்பர்_

சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் 
நிறுவனத்தின் முன் மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் பாடசாலைக் கல்வியை மேம்பாடுத்தும் நோக்குடன் புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம்,  ஜின்னாபுரம் கலவன் பாடசாலை மற்றும் புல்மோட்டை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் மாணவர்களுக்கான 25 சைக்கில்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று(13)   சிறப்பாக நடைபெற்றன.

புல்மோட்டை சதாம் வித்தியாலத்தில் நடைபெற்ற நிகழ்வில் குச்சவெளி  உதவி பிரதேச செயலாளர் 
திருமதி பி. மோஹனமுரளி,புல்மோட்டை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.டபிள்யூ  விஜயகோன், பாடசாலை அதிபர்கள், முஸ்லீம் எயிட் செயற்திட்ட முகாமையாளர்  பாஸ்லான் தாசிம், முஸ்லிம் எயிட் நிறுவான ஊழியர்கள், மாணர்வர்கள் மற்றும் பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சிக்கியிருக்கும், வறிய, பின்தங்கிய குடும்பங்களிலுள்ள  கல்வி கற்கின்ற தூர பிரதேசங்களில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக வழங்கப்பட்டது. முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் உதவிகளை பாடசாலை அதிபர்கள், சமூகத்தினரும் வரவேற்று நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.





Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post