( ஹஸ்பர்)
கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி "பிரஜா கரசர" தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு (RCBO) மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனையில் சிராஜ் நகர் (CBO) சமுதாய அடிப்படை அமைப்பு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று தேசிய மட்ட விருது வழங்கலில் விருதுகள் வழங்கப் பட்டன. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் விருதுகளை பெற்ற உத்தியோகத்தர்கள் இன்று (30) பிரதேச செயலகத்தில் வைத்து பாராட்டப்பட்டனர்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக்,சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.