2022 ஆண்டு நடைபெற்ற க.பொ த உயர்தர தேர்வில் உயிரியல் பிரிவு,கணிதப் பிரிவு,முகாமைத்துவப் பிரிவு,கலைப்பிரிவு . உயிரியல் தொழில் நுட்பம்,பொறியியல் தொழில் நுட்பம் ஆகிய ஆறு பிரிவுகளிலும் திருகோணமலை மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சியும்
பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய தந்தையை இழந்த மாணவருக்கும் படிப்பைத் தொடரப் பணவசதி அற்ற மாணவருக்குமாக மொத்தம் 60 மாணவருக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சியும் 2023.09 .30 ஆம் நாளாகிய இன்று திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் நடத்தப்பட்டது
. இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது .
திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடை பெற்ற மேற்படி விழாவில், கிழக்கு மாணக் கல்விப் பணிப்பாளர் செல்வி அகிலா கனகசூரியம் தலைமை விருத்தினராகக் கலந்து கொண்டார். .இவரோடு வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் கோட்டக் கல்வி அதிகாரிகள் ,பாடசாலை முதல்வர்கள் ,ஆசிரியர்கள்.திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்க நிருவாகிகள்,பெற்றார் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
உயர்தரத்தில் அதிக புள்ளி பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி
bytrinco mirrer
-
0