கிரிஸலிஸ் நிறுவனத்தால் முன்னெடுக்கும் ”பெண்களை ஆளுகைக்கு உற்படுத்தல்என்ற வேலைத்திட்டத்தினை பார்வையிட ஜேர்மன் கெயார் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி ஜெனீபருக்கும் திருகோணமலை உப்புவெளி சனசமூக நிலைய பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் 20ம் திகதி இடம் பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இச் செயல் திட்டம் மூதூர், பன்குளம் மற்றும் பட்டனமும் சூழலும் (உப்புவெளி) ஆகிய பிரதேச சபைகளில் உள்ள 15 சனசமூக நிலையங்களை உள்வாங்கியதாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இச் சன சமூக நிலையத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு நடாத்திய ஆளுமை விருத்தி பயிற்சிகளின் அடிப்படையில் அவர்களால் உருவாக்கபட்ட கிராம அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இனங்கானப்பட்ட தேவைப் பகுப்பாய்வின் அடிப்படையில் 16 இலட்சம் பெருமதியான வேலைத்திட்டத்தை இச் சன சமூக நிலையங்களுக்கு வழங்கி அவர்களின் மூலமாகாவே அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறான ஒரு சநதிப்பு நேற்றைய தினம் பன்குளம் பிரதேச சபைக்கு உட்பட்டட கித்துல்உத்து சனசமூக நிலையத்திலும் இடம் பெற்றது இந்நிகழ்வில் கிஸ்சலிஸ் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் யு.எல். சம்சுதீன் மற்றும் ஆளுகை;கான தொழினுற்ப ஆலோசகர் விமன்ச சொய்சா திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் சுல்பிகா சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜேர்மன் கெயார் அதிகாரியை சந்தித்த உப்புவெளி சனசமூக நிலைய பெண்கள்
byRajkumar
-
0