(திருகோணமலை நகர நிருபர் )
''நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயனாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீடு அறிக்கையில் விடுபட்ட மற்றும் உள்வாங்கப்படாத பயனாளிகள் இன்று (23) வெள்ளிக்கிழமை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.''
.
இதன் போது திருகோணமலை தபால் நிலைய வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது வாகன நெரிசல் ஏற்பட்டது.
தமக்கான தீர்வு கிடைக்காதவிடத்து இப் போராட்டத்தை பாரிய அளவில் முன்னெடுக்கவுள்ளதாக போராட்டக்காரா்கள் தெரிவித்தனர்.