திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தோற்றும் மாணவரது பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கோடு குச்சவெளிக் கோட்டத்தில் உள்ள கோபாலபுரம் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் வகுப்பு மாணவருக்கு ஒவ்வொன்றும் 1680 உரூபா பெறுமதியான ஞானோதயம் என்னும் புலமைப்பரிசில் தேர்வு வழிகாட்டி நூல் 2023.06.20ஆம் நாள் வழங்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன் இவற்றை வழங்கி வைத்தார். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நலன்புரிச் சங்கம் புலமைப் பரிசில் வழிகாட்டி நூல் வழங்கியது.
bytrinco mirrer
-
0