எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் அனுசரணையில் கவியருவி ஈச்சிலம்பற்று ப.மதிபாலசிங்கத்தின் 'எனக்கொரு வரம் வேண்டும்' கன்னிக் கவி நூல் வெளியீட்டு நிகழ்வு ஜுன் 25 ஞாயிற்றுக் கிழமை. திருகோணமலை மல்லிகைத்தீவு மகா வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை 9 மணியளவில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஆ.செல்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கியதுடன் முதன்மை விருந்தினராக மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் ஸீனத்துல் முனவ்ரா முகம்மது நளீம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
மேலும் ஆன்மீக அதிதிகளாக சிவயோகச்செல்வன் த.சாம்பசிவ சிவாச்சாரியார், சிவஸ்ரீ நமசிவாயக் குருக்கள் உட்பட கல்விமான்கள், கலை இலக்கிய படைப்பாளிகள், சமூக சேவையாளர்கள், கிராம ஊக்குவிப்பு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்ததுடன் மல்லிகைத்தீவு மங்களேஸ்வரர் கலாலய மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்மைந்தமை குறிப்பிடத்தக்கது.