ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்து 4 விசைப்படகுகளையும், 22 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளனர். மேலும் இவர்களை ஜூலை 5ம் திகதி வரை சிறையில் அடைக்குமாறு யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், மண்டபம் மீனவர்கள் 5 பேர் உட்பட 22 தமிழக மீனவர்களை படகுடன் உடனடியாக விடுவிக்க கோரி மண்டபம் கோயில் வாடி வடக்கு மற்றும் தெற்கு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.