திருகோணமலையின் உள்ளுராட்சி மன்றங்களில் சிறப்பான சேவையை வழங்கிய உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை நகரசபை சுகாதார பிரிவில் நேற்று 31ம் திகதி இடம் பெற்றது.
இந்நிகழ்வினை கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. சங்கத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் திரு.கோ.விஜயகுமாா் மற்றும் நகரசபையின் உறுப்பினர் கௌரவ திரு. வ.ராஜ்குமாா் ஆகியோர். கௌரவிக்கபட்டனர்.
இதன் போது தொழிலாளர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் மற்றும் புத்தாண்டுக்கான கைவிசேடமும் வழங்கி வைக்கபட்டது.
கிழக்கு மாகாண தொழிற்சங்கத்தால் திருமலை உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கௌரவிப்பு
bytrinco mirrer
-
0