கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2020. மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கா விருது வழங்கல் விழாவும் கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவும் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாண பணிப்பாளர் சரண்யா சுதர்ஷன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கிழக்கு மாகாண ரீதியாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இளம், மூத்த கலைஞர்களுக்கு வித்தகர், இளம் கலைஞர் விருதும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வின் போது பண்பாட்டுப் பேரணியும் கலை இலக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கலந்து கொண்டார்.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - தோப்பூர் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.என்.எம்.புஹாரி இளம் கலைஞர் ( ஊடகத்துறை) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஏனைய அதிதிகளாக திருகோணமலை மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ,கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.