குப்பை மேட்டு யானைகளால் வீதிப் பயணிகளுக்கு அ்ச்சுருத்தல்

தம்பலகாமம் நிருபா் திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்திற்கு உட்பட்ட பாலம்போட்டாறு பிரதேசத்தில் தம்பலகாமம் பிரதேச சபையால் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடமுள்ளது. இந்த குப்பை மேடு பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ளது. இதனால் உணவுக்காக அந்த பகுதிக்கு வரும் காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு அச்சுருத்தல் நிலவுகிறது. அன்றாடம் தம்பலகாமம் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் சந்தைக் கழிவுகளை கொட்டும் இந்த குப்பை மேட்டுக்கு பெருமளவான யானைகள் வந்து உணவுக்காக இந்த கழிவுகளை உண்டு வரும் சம்பவம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.இதனால் வீதியில் செல்லும் பயணிகள் யானைளைப் பார்க்க செல்கின்றனர். அந்த நிலையில் யானை மனித மோதல் ஏற்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது.
அத்துடன் இவ்வாறு யானைகள் உட்கொள்ளும் கழிவுகள் மற்றும் பொலித்தீன் காரணமாக நாட்டின் இயற்கை விலங்கான காட்டுயானைகளுக்கு புதிய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது . அத்துடன் குறித்த யானைகள் வீதியோரத்தில் உள்ள இந்த குப்பை மேட்டு பகுதிக்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க்கவேண்டும். எனவே இது தொடரபாக வன வலங்குகள் பரிபாலன திணைக்களம் உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என இப்பகுதி இயற்கை ஆர்வளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post