நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை நிதிஅனுசரணையுடன் அகம் மனிதாபிமானவளநிலையம் மேற்கொண்டுவரும் “கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டமக்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்துதல் மற்றும் சுகாதாரமானநடைமுறைகளுக்குஆதரவளித்தல் அத்துடன் பாடசாலைகல்விக்கானசிறந்தசூழலுக்காகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மனஆரோக்கியத்தைபுனரமைத்தல்"எனும் திட்டத்தின்கீழ் கிழக்குமாகாணத்தின் திருகோணமலை,மட்டக்களப்புமற்றும் அம்பாறைமாவட்டங்களிலுள்ள வாகரை,கிரான்,செங்கலடி,திருக்கோவில்,ஆலயடிவேம்பு,அக்கரைப்பற்று,மூதூர்,சேருவில மற்றும் வெருகல் ஆகியபிரதேசசெயலாளர் பிரிவுகளில் கொரோனாவைரஸ் தாக்கத்தின் காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்தபயனாளிகளுக்குவாழ்வாதார செயற்பாடுகள்,சத்துணவுமேம்பாடுமற்றும் பாடசாலைகளில் சுகாதாரநடவடிக்கைகளைமேற்கொள்ளல் செயற்பாடுகளைமேற்கொண்டுவருகின்றது.
அதன் ஒருகட்ட செயற்பாடாக மட்டக்களப்புமற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள 10 பாடசாலைகளிலுள்ளமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கொவிட்- 19 பாதுகாப்புநலன் கருதிமருத்துவஅறை( சிக் ரூம்) இற்குதேவையானபொருட்கள் அகம் மனிதாபிமானவளநிலையத்தின் பிரதி இணைப்பாளர் அழகுராசன் மதன் அவர்களின் தலைமையில் நேற்று(09.03.2021) வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உரியபாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துசிறப்பித்தனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள 10 பாடசாலைகளுக்கு மருத்துவ அறைக்கான(சிக் ரூம்) பொருட்கள் AHRC நிறுவனத்தினால் வழங்கிவைப்பு.!
bytrinco mirrer
-
0