திருகோணமலை அன்புவழிபுரம் மயானத்தில் 14 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட தகனச் சூளையும் நீர்த்தாங்கியும் கையளித்தளும் உலக ஆத்மாக்கள் தினமும் நேற்று 02ம் திகதி இடம் இடம்பெற்றது.
சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்புவழிபுரம் சிவில் சமூக பிரதிநிதிகளும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய உறவுகள் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரனையில் குறித்த தகனச் சூளையும் நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டு நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகளால் பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அன்புவழிபுரம் சிவில் சமூகத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி இரத்னராஜா ரொகான்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
எமது உறவுகள் உறங்கும் இந்த இல்லத்தை நாம் பேணி பாதுகாத்து அதன் அடிப்படை தேவைகளை சீர் செய்வது நமது அனைவரின் கடமையாகும். அதனடிப்படையில் அன்புவழிபுரத்தில் வாழ்ந்த சமூக ஆர்வரும் தற்போது இலண்டனில் வசிப்பவருமான யோகராசா நிசாந்தன் அவர்களின் நிதி அனுசரனையில் தேசிய உறவுகள் நலன்புரிச் சங்கத்திம் இந்த அபிவிருத்தி நடவடிக்கையை முன்னெடுத்து தந்தமைக்காக நாம் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.
உறவுகள் உறங்கும் இல்லத்தில் கடந்த 04 ஆண்டுகளாக உலக ஆத்மாக்கள் தினத்தை நாம் அனுஸ்டித்து வருகின்றோம். பெருமளவு பொது மக்கள் பங்கு கொள்ளும் இந்த நிகழ்வு இன்று நாட்டின் அசாதாரண சூழல் காரணமாக அழைப்பு விடுக்காமல் வந்த ஆர்வர்களுடன் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.
கோரொனா தொற்று சம்மந்தமாக சொல்வதானால் கலியுகத்தில் சில விடயங்களை மக்களுக்கு உணர்த்துவதற்காக இடம்பெறுகின்ற சம்பவமாகா இதனைப் பார்கலாம் மரண பயம் வரும் போது நம் மத்தியில் உள்ள மற்றைய குரோதங்களை மறந்து ஒற்றுமையாக செயற்படுவோம் அவ்வாறான ஒரு சம்பவம் சுனாமி வந்த போது இடம்பெற்றது. மேலும் கோரொனா வைரசை கட்டுப்படுத்த முழு உலகத்தாலும் முடியாமல் உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளும் கூட பாரிய பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. எனவே இதற்கான மருந்து கண்டுபிடிக்க படாத நிலையில் வரும் முன் காப்போம் திட்டத்தை மாத்திரம் மிகக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.
ஆயினும் எமது மக்கள் அந்த விடயத்தில் மிகவும் அலட்சியமாக உள்ளதை பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்துள்ளேன். எனவே வரும் முன் காப்போம் திட்டங்களான முகக் கவம் அணிதல் கைகளை நன்கு சவர்காரம் அல்லது தொற்று நீக்கி போட்டு கழுவுதல் சமூக இடைவெளியைப் பின் பற்றுதல் போன்ற விடயங்களை செய்து நோய் வராமல் பாது காத்துக்கொள்ள வேண்டும் நோய் ஏற்பட்ட பின் உயிர் பிழைப்பது இறைவன் கையில் தான் உள்ளது என அன்புவழிபுரம் சிவில் சமூகத்தின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி இரத்னராஜா ரொகான்குமார் தெரிவித்தார்.
அன்புவழிபுரத்தில் தகனச் சூளையும் நீர்த்தாங்கியும் கையளித்தளும் உலக ஆத்மாக்கள் தினமும்
bytrinco mirrer
-
0