அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால் வாழ்வாதாரமும் உணவு நிலைபேறு தன்மையும் என்ற செயற்திட்டத்தின் ( Food Sustainability and livelihood promotion for COVID Response) எனும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 44 குடும்பங்களுக்கு மொத்தமாக 500 தென்னங் கன்றுகள் இன்று (20.10.2020) வழங்கப்பட்டு நடப்பட்டது.
இந்நிகழ்வானது அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் உதவி இணப்பாளர் திரு.அ.மதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.பொன்னம்பலம் தனேஸ்வரன் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.