கட்டுநாயக்காவில் தனிமைப்படுத்தபட்டுள்ள 1500 பேருக்கு திருமலை பெண்கள் வலையமைப்பால் 50 இலட்சம் பெறுமதியான நிவாரணம்






கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தனிமைப்படுத்தபட்டுள்ள 1500 பேருக்கு திருகோணமலை மாவட்ட பெண்கள் வலயமைப்பால் 50 இலட்சம் பெறுமதியான நிவாரண உதவிகள்

கொரொனா தனிமைப்படுத்தல் முகாம்களில்  உள்ள பின்வரும் இடங்களான கண்னொருவ, ரன்தம்பே, பெனிதேனிய, களுத்துறை, நில்வல மற்றும் மாத்தறை பொது வைத்தியசாலை நிலையங்களிலுள்ள  1500  பேருக்கு  5000000.00 (ஐம்பது லட்சம்) ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள், பெண்களுக்கான சுகாதாரப் பொதிகள் என்பன திருகோணமலை  மாவட்ட பெண்கள்  வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமாகிய செல்வி.பிரஷான்டினி உதயகுமார் அவர்கள் தலைமையில் இன்று (24) பிற்பகல் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கையின் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலயப் பிரதேசத்தில்  உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில்   கடமை புரிந்த பெண்ணொருவருக்கு  கொரொனா தொற்று நோய் கடந்த 12.10.2020 அன்று  உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சுதந்திர வர்த்தக வலயப் பகுதிகளிலுள்ள ஆடைத்தொழில்சாலைகளிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ளவர்கள் பல தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான நிவாரண உதவியே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 



Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post