அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பினால் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூரநகர் மற்றும் வாழைத்தோட்டம் கிராமங்களிலள்ள 100 குடும்பங்களுக்கு மொத்தமாக 1000 தென்னங் கன்றுகள் இன்று (22.10.2020) வழங்கப்பட்டு நடப்பட்டது.
இந்நிகழ்வானது வெருகல் பிரதேச செயலாளர் திரு.கு.குணநாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக அகம் மனிதாபிமான வள நிலையம் அமைப்பின் உதவி இணப்பாளர் திரு.அ.மதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் உத்தியோகத்தர்களும் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Tags
Trinco Mirror