தற்போதய காலத்தில் சமூகம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் தொடரபான ஆய்வுக் குலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை திருகோணமலை உப்புவெளி பிரதேச சபை கட்டிடத்தில் இடம்பெற்றது.
USAID/ SCORE திட்டத்தின் மூலம் விழுது ஆற்றல் மேம்பாட்டுமையத்தின் கல்கி இளைஞர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஊடகவியலாளரும் வளவாளருமான வடமலை ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
இதன் போது இளைஞர் அமைப்பினால் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளான காணாமல் போன குடும'பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மொழி உரிமைகள் தொடர்பாக மாவட்டத்தில் எதிர் நோக்கப்படும் பிரச்;சினைகள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாவட்டத்தில் அரச அலுவலகங்களில் கையாழப்படும் முறைமை தொடர்பாகவும் , போதைப் பொருள் பாவனையும் சமூக சீர்கேடுகளும் போன்ற நான்கு தலைப்புக்களில் இந்த ஆய்வுக்கலந்துரையபடல் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் மக்களுடன் நெருங்கிய தெடரபுகளையும் குறித்த நான்கு தலைப்புக்களுக்குள் தொடர்புடைய அரச உத்தியோகத்தர்கள் இளைஞர் அமைப்பின் பிரதிநிதிநிகள் மகளீர் அமைப்பின் பிரதிநிதிகள் அமரா குடுமபத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியத்தின் பிதிநிதிகள் சிவில் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.