திருகோணமலை திருக்கோணேஸ்வரம்
அருள்மிகு மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவம் அடுத்த வருடம் நடைபெறும்.
(அன்புவழிபுரம் நிருபர் )
திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாளின் ஆடிப்பூரத் திருவிழா எதிர்வரும் 15.07.2020ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26.07.2020ஆம் திகதி வரை நடைபெற இருந்த நிலையில் .
கொரோனா தொற்று நிலை சம்பந்தமாக சுகாதாரத் துறை, காவல் துறை சார்ந்த அதிகாரிகளுடன் கோவில் நிர்வாகம் பேசியது. அத்தோடு இது சம்பந்தமாக, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 11.06.2020 திகதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களும் கருத்தில் எடுக்கப்பட்டு.
இவற்றின் விளைவாக, சமூக நன்மையை கருத்தில் கொண்டு, மாதுமை அம்பாளின் திருவிழாவினை ஒத்தி வைப்பதெனவும், அதற்கான பிராயச்சித்தத்தை உரிய காலத்தில் நிறைவேற்றி அடுத்த வருடம் விழாவினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .
திருவிழா இடம்பெறும் 10 நாட்களும் காலை 9.30 மணிக்கும் மாலை 3.30மணிக்கும் அபிசேகமும், அவற்றைத் தொடர்ந்து விசேட பூசையும் இடம்பெறும்.
ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள், அரசினால் வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றது.