புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசியல் சாசனமே நோக்கம்-இரா.சம்பந்தன்

நடைபெறவுள்ள ஆவனி மாதம் 5ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அமைப் போகும் புதிய பாராளு மன்றத்தில் ஒரு புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படவுள்ளது.என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று 1ம் திகதி திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நாவட்சோலையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தோடரந்து அவர் உரை நிகழ்த்துகையில்
புதிய அரசியல் சாசனம் தொடர்பான  கடமை சென்ற பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆயினும் அது நிறைவடையவில்லை நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வினை கொண்டு வருவதற்கு கடந்த காலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தலைவர்களான ரணசிங்க பிரேமதாச சந்திக்கா அமை;மையார் மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் காலத்தில் இந்து அரசியல் சாசனத்தை முதன்மைப்படுத்தி அதி உச்ச அதிகாரம் கொண்ட அரசியல் சாசனத்தை தமிழ் பேசும் மக்களுடைய பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த 30 வருடங்களாக பல முன்னெடுப்புக்கள் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக நாம் பாரிய முயற்சியை நாம் மேற்;கொண்டு வருகின்றோம் புதிய பாராளுமன்றம் உருவாகின்ற போது இந்த சகல விடயங்களையும் உள்வாங்கிக்கொண்டு அதி உச்சமானதும் நிலைத்திருக்க் கூடியதும் சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய திருத்தி அமைக்க முடியாத ஒருமித்த நாட்டுக்குள் பிளவு படாத நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வு எற்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.

இவ்வாறான கருத்தை பொது ஜன பொரமுனவின் தலைவர் மகிந்தராஜபக்ச மற்றும் ஐக்கிய தேசிக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தேசிய மக்கள் சக்தியினுடைய தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் இது விடயமாக பாராளுமன்றத்தில் நாங்கள் உரை நிகழ்த்தி வெளிக் கொனந்துள்ளோம். அதை மறுக்கவில்லை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவை பதிவிலும் எழுத்திலும் உள்ளது.
இவ்வாறான கருத்துக்கள் அனைத்தையும் ஒன்று சேரத்து உள்வாங்கி புதிய பாராளுமன்றம் உருவாகிய பின்னர் ஒரு திருப்திகரமான அரசியல் சாசனம் உருவாக்கப்படவேண்டும் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.அது அமுல்படுத்தப்பட வேண்டும் இதுவே புதிய பாராளுமன்றம் தொடர்பாக எமது எதிர்பார்ப்பு.என தமிழ் Nசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post