திருமலை தென்கயிலையில் செந்தமிழ் பூசை வகுப்பு ஆரம்பம்.

தென்கயிலை ஆதீனத்தில் இன்று 27- 06- 2020 சனிக்கிழமை காலை 7:00 மணிக்கு செந்தமிழ் பூசை வகுப்பு ஆரம்பிக்கப்பபட்டது. அறம் அறக்கட்டளை மற்றும் சைவமாணவர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ,இரண்டு பெண்கள் உட்பட பதினொரு மாணவர்கள் மேற்படி செந்தமிழ்ப் பூசை ஆரம்ப வகுப்பில் இணைந்து கொண்டனர். இப்பயிற்சி காலை 7:00 மணி தொடக்கம் மாலை 5:00 மணிவரை தொடர்ந்து ஒரு கிழமை இடம் பெறும்.
முதற்கட்டமாக  தென்கயிலை ஆதீத்தின் முதற்குரு.தவத்திரு அகத்தியர் அடிகளார் மற்றும் இளையபட்டம் திருமூலர் தம்பிரான் தலைமையில் இடம்பெற்ற செந்தமிழ்ப் பூசை வகுப்பை , அம்பாறை  மாவட்டத்திலிருந்து வருகை தந்துள்ள உயிரொளிசிவம் சனுசனார் அவர்கள் பயிற்சி  அளித்து வருக்கின்றார்.  
நிகழ்வின் முதலில் யாகபூசை இடம்பெற்று, முதற்குரு தவத்திரு.அகத்தியர் அடிகளால் மாணவர்களுக்கு தனித்தனியாக தீட்சை வழங்கப்பட்டது மேற்படி யாகபுசை நிகழ்வின் போது, பொகவந்தலாவையை பிறப்பிடமாகக் கொண்ட,  திருமலையைச் சேர்ந்த அவிரொளிச்சிவம் ஜெகநாதனார் அவர்கள் கலந்து கொண்டு சிற்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நடைபெற்று வரும்  செந்தமிழ்ப் பூசை முதற்கட்டப்பயிற்சி சுமார் ஒரு வாரகாலம் இடம் பெறும். பின்னர் முதற்கட்ட செந்மிழ்ப்பூசைக்குரிய சான்றிதழை தென்கயிலை ஆதீனத்தின் முதற்குரு தவத்திரு அடிகளார் அவர்களால் பயிற்சிக்குரிய சான்றிதழ் வழங்கி வைக்கப்படும்

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post