(கன்னியா நிருபர்)
தென்கயிலை ஆதீனத்தின் மனிதநேய அடுத்த கட்ட நிவாரண நடவடிக்கைகள் கடந்த 06 05 2020 புதன்கிழமை கிழக்கு மாகாணம் அம்பாறைத் தொகுதியில் வழங்கப்பட்டன.
கல்முனை சைவநெறி அறப்பணி மன்றமும் தென்கயிலை ஆதீனமும் இணைந்து மேற்கொண்ட நிவாரணக் கொடுப்பனவுகள், நிந்தாவூர், அட்டப்பள்ளம், திராய்க்கேணி,ஊறணி,செங்காமம் ஆகிய இடங்களிலுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கும்,அறநெறிப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாவட்ட இந்து காலாசார உத்தியோகஸ்தர் திரு;ஜெயராஜி தலைமையில் பெற்ற இந்நிகழ்வில்> சைவநெறி அறப்பணி மன்றத் தலைவர் சைவப்புலவர் யோ.கஜேந்திரா,செயலாளர் லோ.சரவணபவன்,இணைப்பாளர் யுவஸ்ரீ.கலாபாரதி.அடியவன் கவி பிரமீன், திருநீலகண்டர் சைவமகாசபை ஆலோசகர் திரு.அ.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரண நடவடிக்கைகளுக்கு சிறப்புச் சேர்த்தனர்.