(வவுனியா நிருபர்)
வவுனியாவில் இயங்கும் நீதிக்கான மக்கள் அமைப்பு எனும் உள்ளுர் தொண்டு நிறுவனம் 4 பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 300 வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு நிவாரணத்தை நேற்று (10) வழங்கியது.
வவுனியா , வவுனியா சிங்கப் பிரதேச செயலகப் பிரிவு செட்டிக்குளம் , நெடுங்கேணி ஆகிய 04 பிரதேச செயலப்பிரிவில் உள்ள 300 குடும்பங்குக்கு தலா 3000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.