(தம்பலகாமம் நிருபர்)
1991ம் வருடம் ஆனி மாதம் முதலாம் திகதி பட்டதாரி பயிலுநராக ஆசிரியர் நியமனத்தை பெற்றிருந்தார்.
ஆசிரியர் பணியை திருகோணமலை மேற்கு தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்தார்.
பின்னர் வெள்ளை மணல் அல் அசார் வித்தியாலயம் திருகோணமலை சாஹிரா கல்லூரி திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆகியவற்றில் சேவையாற்றினார்.
தொண்ணூற்றி ஒன்பதாம் வருடம் அதிபர் சேவை பரீட்சையில் சித்தி அடைந்து மே மாதம் ஏழாம் தேதி நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். ஒன்பது வருடங்கள் அங்கு அதிபராக கடமையாற்றிய மதியழகன் பின்னர் 2008 2009 ஆம் வருடங்களில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் உதவி கல்விப் பணிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டார்.
திருகோணமலை பெருந்தெரு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு 2009 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்ட மதியழகன் அங்கு உப அதிபராக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
வித்தியாலத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றி வந்த அப்போதய அதிபராக இருந்த நா.இராஜநாதன் 2012ஆம் வருடம் ஓய்வு பெற்றதை தொடர்ந்து விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
அங்கிருந்து 2013 ஆம் வருடம் உவர்மலை விவேகானந்தா கல்லூரி க்கு அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டார் அதே வரு டம் நவம்பர் மாதம் தம்பலகாமம் பகுதிக்கு பொறுப்பான கோட்டக் கல்வி அதிகாரியாக தனது கடமைகளை ஏற்றுக்கொண்டார் நான்கு வருடங்கள் தம்பலகாமத்தில் பணியாற்றிய மதியழகன் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை குச்சவெளி கோ ட்டத்திற்கு பொறுப்பான கோட்டக்கல்வி அதிகாரியாக செயல்பட்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொள்கின்றார்.
தான் அதிபராக எட்டு வருடங்கள் கடமையாற்றிய தற்போது கைலேஸ்வரம் கல்லூரி என அழைக்கப்படும் முன்னைய நிலாவெளி தமிழ் மகாவித்தியாலயத்திற்கு தனது நினைவாக ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபா பெறுமதியான வாயில் கதவு ஒன்றினை உவந்தளித்து இன்று அதனை வைபவ ரீதியாக திறந்து வைத்துக்கொண்டார் இந்த நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கைலேஸ்வரம் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் புவனேஸ்வரன் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் குச்சவெளி கோட்டக்கல்வி அதிகாரி முன்னாள் அதிபருமான சீ.மதியழகன் பிறந்த தினத்தை ஒட்டி பிறந்ததின கேக் வெட்டும்நிகழ்வு கைலேஸ்வரா கல்லூரி நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு பிறந்தநாள் கொண்டாட்டமும் நிகழ்த்தப்பட்டது.
பணி ஓய்வு பெற்றுச் செல்லும் முன்னாள் அதிபரும் கோட்டக் கல்விப் பணிப்பாளர் இன் சேவையை பாராட்டி கல்லூரி அதிபர் ச.புவனேஸ்வரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள சமூக இடைவெளிக்கு அமைய இந்த நிகழ்வு எளிமையாக நிகழ்த்தப்பட்டது.
கோட்டக்கல்வி அதிகாரி சீ.மதியழகன் அவர்களால் உவந்து அளிக்கப்பட்ட வாயிற்கதவை கதவை கோட்டக் கல்வி அதிகாரியின் மைத்துனனும் முன்னாள் சேனையூர் மத்திய கல்லூரியின் அதிபருமான ஆர் .சுந்தர்ராஜன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
மதியழகன் அவர்களின் சேவையை பாராட்டி கல்லூரி ஆசிரியர்களும் அங்கு கூடியிருந்தவர்களும் பல்வேறு வகையில் வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்கள்.