காலநிலை சீர் கேடு காரணமாக திருமலையில் 25000 மீனவர்கள் பாதிப்பு

 காலநிலை சீர்கேடு காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சுமார்  25000  அதிகமான மீனவர்கள் தமது  வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

மாவட்டத்தின் கரையோர பகுதிகள் அனைத்திலும் கடல் நீர் கரையை தாண்டி வருவதனால் மீனவர்களின் கடற்தொழில் படகுகள் கடற்கரையில் இருந்து  பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டள்ளது.

அத்துடன் இன்றுடன் மூன்றாவது நாளாக கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை இழந்துள்ளனர்.மீனவர் சங்கங்கள் தமது அங்கத்தவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறு கட்டிப்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்த நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 25000க்கும் அதிகமான மீனவர்கள் தமது வாழ்வாதாரததை இழந்தள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரொனா வைரஸ் தொற்று காரணமாக மீனவர்களின் மீன்கள் ஏற்றுமதி செய்யப்படாத காரணத்தால் மீன் விலை குறைவடைந்துள்ளது. இதனால் மீனவர்களின் பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் இந்த புயல் அச்சுருத்தல் காரணமாக கடற்றொழில் முழுமையாக தடை செய்யப்பட்டள்ளமை மேலும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.

எனவே அரசு இவர்களின் நிலை தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post