உதயம் விழிப்புணர்வற்றோர் சங்க கொடி வாரம்

திருகோணமலை மாவட்ட உதயம் விழிப்புணர்வற்றோர் சங்கம் கொடி வாரம் ஒன்றை ஆரம்ப்பித்துள்ளது.அதன் ஆரம்ப நிகழ்வு இன்று (17)கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் உதவிப் பணிப்பாளர் பி.தர்சினி தலைமையில் இடம் பெற்றது.

இக் கொடி வாரம் இன்று 17 தொடக்கம் 28ம் திகதி வரை இடம் பெறவுள்ளது.மாவட்டத்தின் பார்வையற்றோர்கள் ஒருங்கிணைந்து நடாத்தும் இக் கொடிவாரத்தில பெறப்படும் வருமானத்தில் விழிப்புணர்வற்றவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் செயற்திட்டங்கள் , அவர்களின் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகள், மற்றும் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் செல்ல முடியாமல் பொருளாதார வசதி இல்லாமல் உள்ளோருக்கு உதவுதல் போன்ற செயற்திட்டங்களை முன்னெடுக்கின்றது.
 
எனவே இச்செயற்திட்டத்திற்கு சகலரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகொள் விடுத்தனர். இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்த்தர் எஸ்.பிரகலா மற்றும் தலைமைக்காரியாலய சிரேஸ்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post