நிலாவெளி வீதி சல்லி,சாம்பல்தீவு சந்தியில் திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேசசபையினால் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் நன்மை கருதி சுற்றுலாமையம் உருவாக்கப்பட்டு, இருக்கைகள் நிறுவப்பட்டு, குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டது.அவர்கள்ஆறுதலாக தங்கி உணவு அருந்தி செல்வதற்கு இது உறுதுணையாக இருக்கும்.என நகரமும் சூழலும் பிரதேசசபை தலைவர் வைத்திய கலாநிதி ஜி.ஞானகுணாளன் தெரிவித்தார்.
திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேசசபையின் உறுப்பினர்களினதும் ஊழியர்களின் பங்களிப்பின் மூலமாக செயல் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலையின் இயற்கை அழகு நிறைந்த நிலாவெளியை நோக்கி செல்லும் பல்லாயிரக் கணக்காண சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தபட்டுள்ளது.