திருகோணமலை மாவட்ட கரையோர வள முகாமைத்துவ கேந்திர நிலையம் நிலாவெளி வேலூர் பகுதியில் இன்று (28) சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசனைக்கு அமைய 80 மில்லியன் ரூபாய் நிதியில் இக்கட்டிடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப்,எம்.எஸ்.தௌபீக், கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பீ.கே.பிரபாத் சந்திரகீர்த்தி ,மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர தஸாநாயக்க மற்றும் அரச உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்