தமிழர்களின் பாரம்பரிய பூமியான கன்னியா வெந்நீர் ஊற்று சம்மந்தமாக பல விடயங்கள் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவற்றை வெளிப்படையாக சொல்ல முடியாத போதிலும் விரைவில் அது பட்டிணமும சூழலும் பிரதேசசபையின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சிங்கபுர வட்டாரம் லிங்கநகரில் நேற்று 07ம் திகதி மாலை இடம் பெற்ற பிரச்சார நிறைவு நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.தண்டாயுதபாணி முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் மற்றும் கனடா தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் குகதாசன் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய போது தற்போது வெளியாகிய இடைக்கால அறிக்கையின் மூலமும் அதனை தொடரந்து இடம் பெறவுள்ள புதிய அரசியல் சாசன உருவாக்கத்தின் மூலம் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உருவாக உள்ளது.
இத்தருணத்தில் நடைபெறவுள்ள இத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ததாக உள்ளது.எனவே இத் தேர்தலிலும் எமது மக்கள் எமக்கான ஆணையை தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.