எதிர்வரும் 10 ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்திலும் தேர்தல் சட்டமீறல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு திருகோணமலை மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தமாக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து இன்றுவரை 120 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக தராதரம் பாராது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெறும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய்ந்து வருவதாக மேலும் திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சஜீத் வெல்கம தெரிவித்தார்.