வரலாற்று சிறப்பு மிக்க இலங்கையில் உள்ள ஒரே சனிஸ்வரர் ஆலயமான திருகோணமலை மடத்தடி சனிஸ்வரர் தேவஸ்தானத்தில் எதிர்வரும் மார்கழி 19ம் திகதி ஏற்படவுள்ள சனிமாற்றத்திற்கான தோஷ நிவர்த்தி மகா யாகம் இடம்பெறவுள்ளது.
ஏதிர்வரும் 19.12.2017 அன்று மாலை 6.37 நிமிடத்தில் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாற்றம் அடைகிறார். தோஷ நிவர்த்தி மகா யாகம் 20.12.2017 புதன் கிழமை காலை 8.00 மணிக்கு கிரிகைகள் யாவும் ஆரம்பமாகும்.
இடபம் மிதுனம் கன்னி விருச்சிகம் தனு மகரம் மீனம் ஆகிய தோஷ ராசிகளாகும்.யாகத்தில் கலந்துகொள்ள விரும்பும் அடியாவர்கள் ரூபாய் 250 ஐ செலுத்திப ற்றுச் சீட்டைப் பெற்றுக் கொள்ளுமாறு ஆலய ஆதின கரத்தா வேதாகமாமணி சோ.இரவிச்சந்திரக்குருக்கள் தெரிவிக்கித்தார்.