இந்தியத் துணைத் தூதரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும்


(ஆர்.பி.ரொசான்)



இந்தியத் துணைத் தூதரகமொன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள்  முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
தமிழ்  பேசும் மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்து மக்கள் தமது  தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள கொழும்பு  நோக்கியே செல்ல  வேண்டியுள்ளதாகவும் இதனால் பல சிரமங்களை அவர்கள் எதிர்நோக்க நேரிடுவது தொடர்பில் மக்கள் தம்மிடம் பல தடவைகள் முறையிட்டுள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்  கூறினார்,
இன்று ஏறாவூரில்  பொது மக்கள் அமைப்பினர் சிலர் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரை நேரில் சந்தித்து கலந்துயைாடிய போதே அவர் இதனைக் கூறினார்,தொடர்ந்தும்  அங்கு கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்.
கிழக்கின் திருகோணமலை ,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்றனர், இவர்கள் வீசா மற்றும் ஏனைய தேவைகளுக்கு இந்திய தூதரகத்தை நாட வேண்டுமானால்  அவர்கள் கொழும்புக்கே செல்ல வேண்டியுள்ளது,தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் மலையகத்தின் கண்டியிலும் வடக்கின் யாழ்ப்பாணத்திலும் இந்தியத் துணைத் தூதரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவ்வாறாயின்  கிழக்கில்  இந்தியத் துணைத் தூதரகமொன்றை ஆரம்பிக்காமல் இருப்பதில் எவ்வித நியாயயத் தன்மையும் இல்லை, கிழக்கில் உள்ள இந்துக்களும் பெரும்பாலும் தமது ஆன்மீகக் கடமைகளுக்கும் இந்தியா செல்கின்றனர்,இதற்கான பயணங்களை முன்டெுக்க அவர்கள்  கொழும்புக்கும் கிழக்குக்குமாக பஸ்களில் அலைந்து திரிய வேண்டியுள்ளது,

ஆகவே  இந்த நிலைமை மாற்றப்பட கிழக்கின்  மட்டக்களப்பில்  இந்தியத் துணைத் தூதரகமொன்று அமைக்க வேண்டும்,

இதேவேளை நாம்  கிழக்கு மாகாண சபை  ஆட்சியில் இருக்கும் போது முன்வைத்த திட்டங்களுக்கமைவாக இன்று மட்டக்களப்பில் சர்வதேச விமானநிலையமொன்றை அமைக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்,

எமது  திட்டவரைபுகளை அரசாங்கம் இன்று கவனத்திற்  கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது,

எதிர்கால கிழக்கை கட்டியெழுப்புதல் தொடர்பில்  மேலும் பல திட்டங்களையும் நாம் ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தோம் எனவே அதற்கமைய அந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என நாம் நம்புகின்றோம் என முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post