கேரளா கஞ்சாவுடன் தமிழர்கள் இருவர் கைது

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம்,ஆனந்தபுரி ஆகிய  பகுதிகளில் நேற்றிரவு(24) இருவரை கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.

அலஸ்தோட்டம் சர்வோதயம் நாகம்மாள் கோயில் பஸ் தரித்து நின்று செல்லுமிடத்தின் அருகாமையில் வைத்து அரைகிலோ கேரளா கஞ்சாவுடன் வயது 41 ஆனந்தபுரி உப்புவெளி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் இவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மற்றுமொருவரான அலஸ்தோட்டம் பகுதியைச் சேர்ந்த வயது47 குடும்பஸ்தர் ஒருவரை ஒருகிலோ 600 கிராமுடனும் கைது செய்துள்ளதாக திருமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவ்வாறு இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் கேரளா கஞ்சா வியாபாரம் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது கைது செய்யப்பட்டவர்கள் இருவரும் கேரளா கஞ்சாவுடன் உப்பு வெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளையும் மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருவாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post