தம்பலகாமம் பிரதேச பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து தரும்படியான கோரிகையை முன்வைத்து மூவின மக்களாலும் இன்று (16.11.2018) காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சம்பவ இடத்துக்கு வருகை தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் B.கயல்விழி ஒரு மாத கால எல்லைக்குள் வைத்தியரை நியமனம் செய்வதாக வாக்குறுதி வழங்கியமைக்கு அமைய அமைதியாக போராட்டம் கைவிப்பட்டது.
ஒரு மாத காலத்திற்குள் தமக்கு வைத்தியரை நியமனம் செய்யாத பட்சத்தில் இப்போராட்டமானது.மிகப்பெரிய அளவில் மீண்டும் நடாத்தப்படும் என பொது மக்கள் தெரிவித்தனர்.
தம்பலகாமம் வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்
byRajkumar
-
0