மூதுார் பெரியவெளி மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் 6வது சந்தேக நபருக்கு மறியல் நீடிப்பு

மூதூர் பெரியவெளி சிறுமிகள் மூவர் பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6வது சந்தேக நபருக்கு விதிக்கபட்டிருந்த விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 27 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 6வது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் 6வது சந்தேக நபரிடம் இருந்து பெற்ற
மரபனு மாதிரிகள் சிறுமிகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளுடன் ஒத்துள்ளதாக மரபனு பரிசோதனை அறிக்கை அமைந்துள்ளமையால் 6வது சந்தேக நபரை கடந்த 30ம் திகதி குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டு நீதிவான் நீதிமன்ற நீதிபதி றிஸ்வான் முன்னிலையில் இன்று 13ம் திகதி வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 28.05.2017 அன்று இடம் பெற்ற மூதுார் பெரியவெளில் சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்கில் வழக்கு எண் B199/2017 மற்றும் B200/2017, B201/2017 ஆகிய வழக்குகள் மூதுார் நீதி மன்றத்தால் நடாத்தபட்டு வந்த சந்தர்ப்பத்தில் சம்பவ தினமான மே 28ம் திகதி அன்று தோப்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடத்த தொழிலாளர்கள் 5பேர் மூதுார் பொலிசாரால் கைது செய்யப்படனர்.அவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவானவும் பல்வேறு போராட்டங்கள தமிழ் முஸ்லீம் பகுதியில் இடம் பெற்றது. சம்பவத்திற்கு மறுநாள்மூதுார் பாலநகர் பகுதியில் இருந்து 6வது சந்தேக நபரான எம்.எம்.றியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு இரண்டு தினங்களில் மூதுார் நீதவான் நீதி மன்றத்தினால் குற்றவாளியை அடையாளம் காட்டும் அடையாள அணிவகுப்பு இடம் பெற்றதில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் எவரையும் அடையாளம் காட்டவில்லை என்பதற்கு அமைய 6 சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்றைய தினம் நீதி மன்றத்தில் இவ்வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நான்கு சட்டத்தரணிகள் சிறுமிகளுக்கு சார்பாக ஆஜராகினர்.சந்தேக நபருக்கு ஆதரவாக ஒரு சட்டத்தரணியும் ஆஜராகினர்.சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி சநதேக நபருக்கு பிணை வழங்குமாறு மன்றத்திடம் கோரியிருந்தார்.சந்தேக நபர் ஏற்கனவே பிணையில் இருந்துள்ளார்.அத்தகைய காலத்தில் நீதி மன்ற உத்தரவுகளை மதித்து நடந்ததாகவும் விசாரனைகளுக்கு ஒத்துழைத்துள்ளார்.எனவும் கேட்டிருந்தார். பொலிசார் தரப்பிலும் சிறுமிகளுக்கு சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் பிணை வழங்கக் கூடாது எனவும் தமது தரப்பு நியாயங்களை முன் வைத்திருந்தனர். இந்த நிலையில் சந்தேக நபரின் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.மேலும் அடுத்த வழங்கு தினமாக 27ம் திகதி அறிவிக்கப்பட்டது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post