பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்குவால் 2 பெண்கள் திருமலையில் உயிரிழப்பு

இம்புளுவென்ஸா எச் 1, என் 1 காய்ச்சல் மற்றும் டெங்குக் காய்ச்சல் காரணமாக திருகோணமலையில் இருவர் இன்று (11) உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். காய்ச்சல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த 8ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட தோப்பூர், அல்லை நகரைச் சேர்ந்த எஸ்.றிமாஸா (வயது 32), சிகிச்சை பெற்றுவந்த நிலையில்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 


குறித்த பெண்ணின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இவருக்கு இம்புளுவென்ஸா எச் 1, என் 1  இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது எனத் திருகோணமலை பொது வைத்தியசாலைப்  பணிப்பாளர், டொக்டர்; அனூசியா ராஜ்மோகன் தெரிவித்தார். இதேவேளை, டெங்குக் காய்ச்சல் காரணமாக கோபாலபுரம் நிலாவெளியைச் சேர்ந்த மகாலிங்கம் பிரதீபா (வயது 38) என்பவர் உயிரிழந்துள்ளார். காய்ச்சலுக்கு உள்ளான இப்பெண், தனியார் வைத்தியசாலை ஒன்றில் இரத்தப் பரிசோதனை மேற்கொண்டதாகவும் இதன்போது, அவர் டெங்குக் காய்ச்சலுக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்துள்ளது. இதனை  அடுத்து, திருகோணமலை பொது வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ; திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக இதுவரையில் 16 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post