டெங்கு ஒழிப்புக்கு மக்கள் படை களத்தில்

திருகோணமலையில் டெங்கு நோயால் நாள் ஒன்றுக்கு 100 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆயினும் வைத்தியசாலையில் போதுமான இடவசதி ஆளனி மற்றும் படுக்கைகள் இல்லாதுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி அனுசியா ராஜ்மோகன் தெரிவித்தார்


நேற்று (6)மாலை திருகோணமலையில் தீவிரமாக பரவி வருகின்ற டெங்கு நோயை கட்டப் படுத்த திருகோணமலை பொது மக்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்ற தலைப்பிலான கலந்துரைடல் ஒன்று கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில்  மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் இடம் பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். 
 
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் முன்னால் நகரசபை உறுப்பினர் கா.கோகுல்ராஜ்  புpராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் திருகோணமலை நகரசபை செயலாளர் மற்றும் உப்புவெளி பிரதேச சபை செயலாளர் மற்றும் தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர்கள் பொது சுகாதார பரிசேதகர்கள்  மற்றும் ஆலயங்களின் நிர்வாகிகள் நலன் விரும்பிகள் என பலர் இந்து கலந்துரையாடலில் தமது கருத்துக்களையும் ஆலோசனையையும் முன் வைத்தனர்.


இறுதியாக டெங்கு நோய் அதிகமான பாதிப்புடையும் இடங்களில் பொது அமைப்புக்களின் உதவியுடன் சேவை அடிப்படையிலான சிரமதான நடவடிக்கைகளை மேற் கொண்டு டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களை இனங்கண்டு கட்டப் படுத்துவோம் என முடிவெடுத்து அதற்கான விசேட குழுவொன்று அமைக்கபட்டது.அவர்களுக்கான தேவைகளை மாவட்டத்தின் தொண்டு அமைப்புக்கள் மற்றும் ஆலங்களின் நிதி அனுசரனையுடன் பூர்த்தி செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தும் விதத்தில் வீதி நாடகங்களை ஏற்பாடு செய்வோம் எனவும் முடிவெடுக்கபட்டது.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post