மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாட்டாளிபுரம் நல்லூர் மலைமுந்தல் நீலாக்கேணி உட்பட இக் கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கான உப தபால் அலுவலகம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுகின்றனர்.
தமக்கான வறியோர் முதியோர் மற்றும் விதவைகள் அநாதைகள் போன்றவர்களுக்கு சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கும் கொடுப்பனவைப் பெற 06 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கட்டைப்பரிச்சான் உப தாபால் அலுவலகத்திற்கே செல்ல வேண்டியுள்ளது.
மிகக் குறைவான தொகையான இப் பணத்தை பெற இங்கு கால் நடையாகவோ பேருந்திலோ சென்று வருவதானால் அன்றைய நாள் முழுமையாக செலவிடப்படுவதுடன் இதில் கிடைக்கும் தொகையில் பாதி செலவாகிறது.
எனவே இப்பகுதியில் இந்த கொடுப்பனவைப் பெருகின்ற மக்கள் அதிகமாக உள்ளதால் இப்பகுதியில் ஏதேனும் பொதவான ஒர் இடத்தில் உப தபாலகம் ஒன்றை அமைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை மேற் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.