கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைகளும் இன்று 15 ஆம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு மூடப்படும் என்று கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட்லெப்பை அறிவித்துள்ளார். கிண்ணியாவில் டெங்குத் தாக்கத்தினால் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் நேற்று 14 வரையிலும் 12 பேர் மரணித்துள்ளார். இதனால் பாடசாலைக்கு வருகைதரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வரவில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவ்வாறான காரணங்களை தெளிவுபடுத்தி கிழக்கு மாகாண ஆளுநர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர். மற்றும் செயலாளர்களுடன் கலந்தாலோசித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இதன் பிரகாரம் எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் பாடசாலை மூடப்படும் என்றும் அவர் கூறினார்.