திருமலையில் டெங்கு அபாயம்-தனியார் கல்வி நிலையம் இன்று முதல் பூட்டு

திருகோணமலையில் டெங்கு அபாயம் தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் இன்று (08) முதல் தனியார் கல்வி நிலையங்களை இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூட முடிவெடுக்கபட்டுள்ளது. 

நேற்று (7) மாலை 7.00 மணியளவில் திருகோணமலை தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி  என்.விஜியகுமார் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோர் பங்கு கொண்ட கலந்துரையாடலில் இந்த முடிவு எட்டப்ட்டது. 

இந்த கலந்துரையாடலில் 45க்கும் அதிகமான தனியார் கல்வி நிலைய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இக்கலந்துரையாடலில் உரையாற்றும் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுபாணி குறிப்பிடுகையில் திருகோணமலையில் டெங்கின் மூலம் உயிரிழந்த  5 பேரில் இருவர் மாணவர் அத்துடன்   தற்போது டெங்கு மூலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளவர்களில் அதிகமானவர்கள் மாணவர்களாக காணப்படுகின்றனர்.

அத்துடன் தனியார் கல்வி நிலையங்களில் கற்பித்தல் நடைபெருகின்ற காலை மற்றும் பிற்பகல் நேரங்களிலேயே அதிகமாக டெங்கு நோய் நுளம்புகள் தாக்கக் அதிகமாக  காணப்படகிறது எனவே தனியார் கல்வி நிலையங்களை  இரண்டு வார காலத்திற்கு தற்காலிக மாக மூடுமாறு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி கோரியிருந்தார்.

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post