திருகோணமலையில் டெங்குக் காய்ச்சல் காரணமாக குறிஞ்சாக்கேணியைச் எம்.ஹாலித் (வயது 43) இன்று (7) காலை உயிரிழந்துள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
டெங்கு நோயால் மேலும் ஒருவர் மரணம்-உயிரிழந்தோர் தொகை 5 ஆக உயர்வு
byRajkumar
-
0